Home இலங்கை அரசியல் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன் அதிரடி

தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன் அதிரடி

0

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என தேர்தலுக்கு முன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) வழங்கிய செவ்வி ஒன்றில் தெரித்துள்ளார்.

மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் என்றும் சுமந்திரன் குறித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி (NPP) 80,830 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

தேசியப்பட்டியல்

 இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 63,327 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் எம்.ஏ.சுமந்திரன் தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இல்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறுகிய காலத்தில் பிரபலமான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தற்போது வெளியான இறுதி முடிவிற்கமைய ஒரு ஆசனத்தை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

மேலும், இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version