Home சினிமா ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான்...

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா

0

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன மாமன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். சூரிக்கு ஜோடியாக நடிக்க அவர் ஓகே சொன்னதும் அதையே அவரது பலரும் வியப்பாக பார்த்தார்களாம். அவருக்கு ஜோடியாக நடிக்க ஓகேவா என பல முறை கேட்டிருக்கிறார்கள்.

ஆனாலும் ஐஸ்வர்யா லட்சுமி அந்த படத்தில் தைரியமாக நடித்த நிலையில் படமும் பெரிய ஹிட் ஆனது.

நிஜத்திலும் டாக்டர்

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்திலும் டாக்டர் தான். அவர் நிஜமான டாக்டர் என்பதால் தான் மாமன் படத்தில் டாக்டராக இயல்பாக நடித்திருக்கிறார் என சூரி தற்போது பாராட்டி இருக்கிறார்.

“ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார். அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும்” என சூரி பதிவிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version