மாமன்
தமிழ் சினிமாவில் தனது பயணத்தை நகைச்சுவை நடிகராக துவங்கி, பின் ஹீரோவாக களமிறங்கி கலக்கிக்கொண்டு இருக்கிறார் சூரி.
விடுதலை கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன். இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
மேலும் ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் உள்ளியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்த நிலையில், உலகளவில் இதுவரை மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
Source: https://cineulagam.com/article/maaman-movie-box-office-report-1748748499
