Home இலங்கை அரசியல் மாவீரர் நாளுக்காகத் தயாராகும் ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தைப் பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி

மாவீரர் நாளுக்காகத் தயாராகும் ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தைப் பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி

0

 2024ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வினை நினைவு கூருவதற்கு தமிழர் தாயக பகுதிகளில் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் மன்னார் (Mannar) – ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல ஆயத்தப்பணிகள் நேற்றையதினம் (24.11.2024) ஆரம்பமானது.

மன்னார் – ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கான ஆயத்தப்பணிகள் இடம்பெற்றுவரும் இடத்தினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (
T. Raviharan) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நினைவேந்தல்

ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ள, நினைவேந்தல் குழுவினருடனும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கலந்துரையாடியிருந்தமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயக மக்கள் விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள்.

ஈழ விடுதலைக்கான போர் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் யுத்ததில் உயிரிழந்த தமது மக்களை நினைவு கூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version