மதராஸி
கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
ஏ.ஆர். முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதல் முறையாக உருவான இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்திருந்தனர். அனிருத் இசையமைக்க ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.
தமிழக வசூல்
உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 88 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மதராஸி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.
சூப்பர் சிங்கரில் கடும் கோபத்துடன் பேசிய மிஷ்கின்.. காரணம் என்ன
இதுவரை 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மதராஸி படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் வசூல் செய்துள்ளது.
ரெமோ, வேலைக்காரன், டாக்டர், ரஜினிமுருகன், டான், அயலான் மாவீரன், அமரன் ஆகிய சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் இதற்கு முன் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
