Home இலங்கை அரசியல் மீண்டும் வருவேன் – நாட்டில் விரைவில் பாரிய சுழல்காற்று – அரசை எச்சரிக்கும் மகிந்த

மீண்டும் வருவேன் – நாட்டில் விரைவில் பாரிய சுழல்காற்று – அரசை எச்சரிக்கும் மகிந்த

0

விரைவில் நாட்டு அரசியலில் பாரிய சுழல்காற்று வீசக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள ஜனநாயக ரீதியில் செயல்படுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இளைஞர்களிடம் கோரிக்கை
விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

ஜனநாயக ரீதியில் தமது உரிமை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது கால்டனில் வசித்தாலும் தேவை ஏற்படும் பட்சத்தில் கொழும்புக்கு விரைந்து வர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தம் மீதான விமர்சனங்கள் தொடர்பாக கவலையடைய தேவையில்லை என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விரைவில் நாட்டு அரசியலில் பாரிய சுழல்காற்று வீசக்கூடும் என்றும் மகிந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்

எனவே இளைஞர்கள் முறையற்ற செயல்களில் ஈடுபடாமல் ஜனநாயக ரீதியில் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version