மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று எச்சரிக்கை மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும்.
அதிகளவான நீரைப் பருக
நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும்.
அத்துடன், இயலுமானவரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
