மதராஸி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மதராஸி.
இப்படத்திற்கு முன் வெளிவந்த அமரன் படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதுதான் சிவகார்த்திகேயனின் கரியர் பெஸ்ட் வசூலாகும்.
இதனால் மதராஸி அதைவிட அதிக வசூல் செய்து சாதனை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்திய நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்
ப்ரீ புக்கிங்
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், செப்டம்பர் 5ம் தேதி இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், மதராஸி திரைப்படம் ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கிவிட்டது. இதுவரை நடைபெற்ற ப்ரீ புக்கிங்கில் ரூ. 8.9 லட்சம் வசூல் செய்துள்ளது.
