எதிர்நீச்சல்
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் எதிர்நீச்சல்.
பெண்களை வைத்து முக்கியமான கருவை வைத்து ஒளிபரப்பான இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்கியிருந்தார். 750 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான முதல் பாகம் கடந்த வருடம் முடிவடைந்தது.
முதல் பாக முடிந்த வேகத்தில் 2ம் பாகமும் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
2024ல் முடிவுக்கு வந்த தமிழ் சின்னத்திரை தொடர்கள் என்னென்ன.. முழு விவரம்
மதுமிதா பதில்
முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த மதுமிதா 2வது பாகத்தில் நடிக்கவில்லை.
அதற்கு பதில் அவர் விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக இருக்கும் அய்யனார் துணை என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் கலந்துரையாடிய மதுமிதாவிடம் ரசிகர் ஒருவர் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகியது ஏன் என கேட்டுள்ளார்.
அதற்கு அவர், இதுகுறித்து மற்றொரு இன்ஸ்டா லைவில் கூறுகிறேன் என பதில் அளித்துள்ளார்.