Home முக்கியச் செய்திகள் சிறப்பான இடம் பெற்ற மடு அன்னையின் ஆவணித் திருவிழா : லட்சக்கணக்கிலான பக்தர்கள் பங்கேற்பு

சிறப்பான இடம் பெற்ற மடு அன்னையின் ஆவணித் திருவிழா : லட்சக்கணக்கிலான பக்தர்கள் பங்கேற்பு

0

மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை (14) காலை 6.15
மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.

சிலாப மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை (vimal siri jayasuriya andagai) தலைமையில்
மன்னார் (Mannar) மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ (Emmanuel Fernando) ஆண்டகை மற்றும்
குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக
ஒப்புக்கொடுத்து உள்ளனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து ஆசியும்
இறை மக்களுக்கு வழங்கப்பட்டது.

திணைக்கள தலைவர்கள்

குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை
ஞானப்பிரகாசம் அடிகளார் (Gnanprakasam), மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம்
அடிகளார் (P. Krista Nayagam), அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ
ஒன்றியத்தின் ஸ்தாபகர் பிதா அருட்கலாநிதி எஸ்.சந்ரு
பெர்னாண்டோ (S. Sanru Fernando) மற்றும் அரசியல் பிரதிநிதிகள் திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல
பாகங்களிலும் இருந்து சுமார் ஏழு லட்சம் வரையிலான பக்தர்கள் கலந்து
கொண்டிருந்தனர்.

மேலும், மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவில் நாட்டின் அனைத்து பாகங்களில்
இருந்தும் கலந்து கொள்ளும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல
ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/9WgpoNP06Yk

NO COMMENTS

Exit mobile version