Home சினிமா மதுரை முத்துவின் நல்ல மனசு, அனாதை பிள்ளைகளுக்கு உதவ அவர் செய்யப்போகும் விஷயம்… வைரலாகும் வீடியோ

மதுரை முத்துவின் நல்ல மனசு, அனாதை பிள்ளைகளுக்கு உதவ அவர் செய்யப்போகும் விஷயம்… வைரலாகும் வீடியோ

0

மதுரை முத்து

சின்னத்திரை பிரபலங்களில் விஜய் டிவியில் கலக்கியவர்கள் தான் இப்போது அதிகம் மக்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

அப்படி காமெடி ஷோ மூலம் பிரபலமாகி இப்போதும் கடி ஜோக்குகளை கூறி மக்களை சிரிக்க வைத்து வருபவர் மதுரை முத்து. சமீபத்தில் இவர் தனது தாய், தந்தை மற்றும் முன்னாள் மனைவிக்கு ஒரு கோவில் கட்டிவந்த விஷயம் வெளியாகி இருந்தது.

இன்னொரு ஆசை

தற்போது மதுரை முத்து தனக்கு இருக்கும் இன்னொரு ஆசை குறித்தும் பேசியுள்ளார்.

அதில் அவர், இன்னொரு ஆசை என்னவென்றால் இந்த படத்தில் ஒரு 7, 8 அறைகள் கட்டி தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளை இங்கேயே தங்க வைத்து படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை.

அதே மாதிரி நம்ம சக்திக்கு தகுந்தபடி முதியோர்களையும் தங்க வைக்கனும்னு ஒரு ஆசை இருக்கு. இங்க ஒரு நூலகம் உருவாக்கி வீட்ல ஒரு 7000, 8000 புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.

அந்த புத்தகங்களை இங்கே வைத்து அந்த பசங்களை படிக்க வைப்பதற்கு ஒரு முயற்சி செய்யணும்னு ஆசைப்பட்டிருக்கிறேன் என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version