மகாநதி சீரியல்
விஜய் டிவியில் நிறைய ஹிட்டான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் மகாநதி.
அப்பாவை இழந்த 4 அக்கா, தங்கைகளின் பாசப் போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த கதையில் விஜய்-காவேரி ஜோடிக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது என்று கூறலாம்.
மலேசியாவிற்கு கிளம்ப போகும் முத்து, விஜயா, வசமாக சிக்கப்போகும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை இந்த வார பரபரப்பு புரொமோ
புரொமோ
இந்த வாரத்திற்கான படத்தின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் யமுனாவிடம், நிவின், காவேரி-விஜய் Contract திருமணம் பற்றி கூறிவிடுகிறார்.
இதனால் ஷாக் ஆன யமுனா இந்த விஷயத்தை தனது குடும்பத்தினரிடம் கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
இன்னொரு புரொமோவில் காவேரியுடன் தனியாக இருக்க கம்பெனியில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு கொடைக்கானல் கிளம்ப பிளான் போடுகிறார். தற்போது இந்த 2 புரொமோக்கள் வைரலாகி வருகிறது.