மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் சில ஹிட்டான தொடர்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் பிரவீன் பென்னட்.
இப்போது விஜய்யில் மகாநதி என்ற சீரியல் இயக்கி வருகிறார், இதற்கு முன் பாரதி கண்ணம்மா, வீட்டுக்கு விடு வாசற்படி, பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற தொடர்களை இயக்கியிருந்தார்.
வெப் தொடர்
மகாநதி சீரியல் மூலம் மக்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக வலம் வரும் பிரவீன் பென்னட் இப்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.
ஜீ தமிழில் 2 முக்கிய சீரியல்களின் மெகா சங்கமம்.. எந்தெந்த தொடர்கள், முழு விவரம்
அதாவது சீரியலை தாண்டி வெப் தொடர் இயக்க கமிட்டாகியுள்ளாராம், அதன் அறிவிப்பு தான் வெளியாகியுள்ளது. ஜியோ ஹாட் ஸ்டாரில் Resort என்ற பெயரில் வெப் தொடர் இயக்க உள்ளாராம்.
விஜய் ராஜேந்திரன், தலைவாசல் விஜய், தான்யா, தர்ஷனா ஸ்ரீபால், விஷ்ணு பாலா ஆகியோர் நடிக்கும் இந்த வெப் தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கிறார்களாம்.
