Home இலங்கை அரசியல் ஜனாதிபதியால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : பிரதமர் சுட்டிக்காட்டு

ஜனாதிபதியால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : பிரதமர் சுட்டிக்காட்டு

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) திறமைசாலியாக இருந்தாலும் அவர் மட்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் (Maharagama) இன்று (19) இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “75 வருடங்களாக இந்த நாட்டில் ஆட்சியில் இருந்த எவரும் தேசிய மக்கள் சக்திக்கு (National People’s Power) அதிகாரம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

மக்கள் அதிகாரம்

அந்த அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கினார்கள். இருப்பினும், தேசிய மக்கள் சக்தி ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு மக்கள் இயக்கமாகும்.

அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாத்திரம் இந்த நாட்டை கட்டியெழுப்புவது கடினம். இம்முறை நல்லதொரு அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களாகிய உங்களின் பொறுப்பு.

வலுவான அமைச்சரவை

இந்த வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்கு வலுவான அமைச்சரவை மற்றும் முற்போக்கான நாடாளுமன்றம் அவசியம்.

மேலும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என்று கூறிய போதிலும், அவர்களில் பாதி பேர் தாமாக முன்வந்து இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர்.

எனவே நாட்டின் தரத்தை மாற்றியமைக்கும் குழுவொன்றை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் சந்தர்ப்பம் தற்போது மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது” என பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version