Home முக்கியச் செய்திகள் பெருக்கெடுத்த மகாவலி கங்கை: அரசாங்க அதிபரின் அறிவிப்பு

பெருக்கெடுத்த மகாவலி கங்கை: அரசாங்க அதிபரின் அறிவிப்பு

0

மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டுள்ள
அதிக நீர்வரத்தினால் ஏற்பட்டுள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலை தொடர்பில் திருகோணமலை
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இடைத்தங்கல் 

மேலும் கருத்து தெரிவித்த அவர், “திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலக
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவலி கங்கையின் நீர்வரத்து அதிகரித்திருப்பதன்
காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கி இருக்கின்றது.

குறிப்பாக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக குளக்கட்டுகள் மற்றும் வரம்புகள்
சேதமடையக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

மாவிலாறு அணைக்கட்டும் உடைப்பெடுத்து
இருப்பதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான
முறையில் வெளியேற்றுவது தொடர்பாகவும், அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க
வைப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version