ஓய்வுபெற்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலக்கம் 05 இல் கடமையாற்றிய 116 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 07 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளடங்குகின்றனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 38 பொலிஸ் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு பிரிவு
ஓய்வுபெற்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலக்கம் 05 என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.