Home இலங்கை அரசியல் மொட்டுக் கட்சியின் முன்னாள் எம்.பிக்களுக்கு மகிந்த விடுத்துள்ள அழைப்பு

மொட்டுக் கட்சியின் முன்னாள் எம்.பிக்களுக்கு மகிந்த விடுத்துள்ள அழைப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

மகிந்த ராஜபக்சவுக்கும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் (27) கொழும்பில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச “இந்த அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. மாறாக அரசியல் பழிவாங்கலுக்கு விசேட கவனம் செலுத்துகின்றது.

ரணில் ஜனாதிபதியாக தெரிவு

ஆகவே கடந்த காலங்களை மறந்து அனைவரும் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய வேண்டும்“ என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் கலந்து கொண்ட நிலையில் மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை, கூட்டுறவு சங்கத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் “2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யும் தீர்மானத்தை கட்சி எடுத்தது.

அந்த தீர்மானத்துக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கினோம். கட்சிக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை“ என்று குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இதேவேளை குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பிலும் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

N3XH76

எதிர்வரும் காலப்பகுதிகளில் மாவட்ட மட்டத்தில் புதிய தொகுதிகளை அமைப்பதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்சி மட்டத்தில் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றை நியமிப்பதற்கும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version