Home இலங்கை அரசியல் ஊரடங்குச் சட்டம் ஒரு தேவையில்லாத ஆணி! மகிந்த தேசப்பிரிய விமர்சனம்

ஊரடங்குச் சட்டம் ஒரு தேவையில்லாத ஆணி! மகிந்த தேசப்பிரிய விமர்சனம்

0

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள தற்போதைய ஊரடங்குச் சட்டம் ஒரு தேவையில்லாத ஆணி என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வழங்கிய குரல்பதிவு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போதைய நிலையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையானது பொதுமக்களை தேவையில்லாத பதற்றத்திற்குள்ளாக்கும்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசிக்காமல் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் தவறான விடயமாகும்.

எதுவாக இருந்த போதும், தற்போதைய நிலையில் பொதுமக்கள் அமைதியாக நடந்து கொள்வதே பொருத்தமானது என்றும் மகிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version