அரசமைப்பில் உள்ள ஒருசில ஓட்டைகளைக் காரணம் காட்டி
மக்கள் ஆணை வழங்கும் தேர்தல்களுடன் எவரும் விளையாடக்கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLFP) தலைவர் மகிந்த
ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என்பதோடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்
காலமும் 5 வருடங்கள் ஆகும்.
ஆகவே, தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்பதோடு ஜனாதிபதித் தேர்தலை
ஒத்திவைக்க மொட்டுக் கட்சி அனுமதி வழங்காது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,