Home இலங்கை அரசியல் அநுர அரசின் அதிரடியில் வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மகிந்த கும்பல்

அநுர அரசின் அதிரடியில் வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மகிந்த கும்பல்

0

இலங்கையில் செயற்படும் போதைப்பொருள் வலையமைப்புடன் முன்னாள் ஆட்சியாளர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வலைப்ப்பின் பின்னணியில் செயற்பட்ட பிரபல அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக தராதரம் பாராது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளாார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் சில போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்ள புகைப்படங்களையும் அவர் ஊடகங்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.

கொள்கலன்களின் உரிமையாளர்கள்

ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது பிரதியமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இந்த புகைப்படங்களில் அரசியல் பிரமுகர்களுடன் இருப்பவர்கள், தற்போது சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ள இரண்டு போதைப்பொருள் கொள்கலன்களின் உரிமையாளர்கள் எனவும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.


சட்ட நடவடிக்கை

போதைப்பொருள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் சிலர் பட்டமேற்படிப்புக்காக வெளிநாடு செல்கின்றனர். மேலும் சிலர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுககு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கப்படும்.

அதற்காக கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை உச்ச பயனுள்ளதாக பயன்படுத்துவோம் என பிரதியமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version