முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டால், அவருக்கு வீடு வழங்க பல நாயக்க தேரர்கள் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் நாமல் ராஜபக்சதெரிவித்தார்.
இந்த விடயத்தை மகிந்த ராஜபக்சவிடம் அவர்கள் கூறியதாகவும் நாமல் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம்
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகளின் வீடுகள் உள்ளிட்ட சலுகைகளைக் குறைப்பதற்கான சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 500 ற்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
