முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, குடியேற வேறு வீடு இல்லையென்றால்,
அரசாங்கம் அவருக்கு பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் தம்புத்தேகமவில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி
திசாநாயக்க, தானும் அமைச்சர்களும் மாளிகைகளுக்கு குடிபெயரவில்லை என்று
குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் , முன்னாள் ஜனாதிபதிகளால் ஏன் இதனை செய்ய முடியாது என்று அவர்
கேள்வி எழுப்பியுள்ளார்.
மாளிகையில் வாழ்வது நியாயமானதல்ல
மேலும், வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்து ஒரு மாளிகையில் வாழ்வது நியாயமானதல்ல.
அவர் வசிக்கும் மாளிகை மிகப் பெரியது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அவர்களை வெளியேறச் சொன்னால், அது அரசியல் பழிவாங்கல் என்று அவர்கள்
கூறுகிறார்கள்.
நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை.
தாம், நாட்டை ஒரு புதிய திசையில் கொண்டு செல்வந்தாக குறிப்பிட்ட ஜனாதிபதி,
வெளியேற சொல்வதற்கு முன்பு அவர்கள் வெளியேற வேண்டும் என்றும்
தெரிவித்துள்ளார்.
