Home இலங்கை அரசியல் பாலச்சந்திரனால் அதிகாலையில் தூக்கத்தை இழந்த மகிந்த..!

பாலச்சந்திரனால் அதிகாலையில் தூக்கத்தை இழந்த மகிந்த..!

0

தற்போது இலங்கையில் பேசுபொருளாகி இருக்கின்ற விடயம் பிரித்தானியாவால் தடை செய்யப்பட்ட இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவ அதிகாரிகளினதும் கருணாவின் தடையும் ஆகும்.

இதற்கு அரசியல் களத்தில் உள்ளவர்கள் பலவாறு கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் நாமல் ராஜபக்ச ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மகிந்த ராஜபக்சவின் தூக்கத்தை கலைத்த விடயமாக நாமல் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது பாலச்சந்திரனுடைய இறப்புச் செய்தியை அறிந்ததும் தனது தந்தையான மகிந்த ராஜபக்ச தூக்கம் கலைந்து எழுந்ததோடு, சில தடுமாற்றங்களை எதிர் கொண்டதாகவும் ஏன் இவ்வாறான இறப்புக்கள் நிகழ்கின்றது என ஆதங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாலச்சந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாக நாமல் குறிப்பிடுகின்றார்.

மேலும் தனது தந்தையின் வாழ்நாளில் இவ்வளவு துயரத்தை ஆழ்த்திய சம்பவமாக இதுதான் உள்ளது என நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார்.

யுத்தம் இடம்பெற்ற போது சர்வதேசமும் புலம்பெயர் தேசமும் ராஜபக்சவிடம் யுத்தத்தை நிறுத்துமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டதை கருத்தில் கொள்ளாத இவர்களுக்கு எவ்வாறு பாலச்சந்திரனுடைய மரணம் தூக்கத்தைக் கலைந்திருக்கும்.

இதற்கு பின்னணியில் உள்ள விடயத்தை நோக்கினால் தற்போது பிரித்தானிய விதித்த தடையின் எதிரொலியே ஆகும்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version