Home இலங்கை அரசியல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மகிந்த, மைத்திரி

உயிருக்கு ஆபத்தான நிலையில் மகிந்த, மைத்திரி

0

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் தாங்கள் முன்னர் பயன்படுத்திய குண்டு துளைக்காத கார்களை மீள தங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமது உயிர்களுக்கு ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டி, இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகை சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, குறித்த இருவரும் தங்களின் குண்டு துளைக்காத கார்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

குண்டு துளைக்காத கார்

எனினும், தற்போது குண்டு துளைக்காத கார்களை திருப்பித் தருமாறு மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் பொது பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவிற்கு இந்த கோரிக்கையை அனுப்ப உள்ளார்.

இந்தக் குழுவில் கலந்துரையாடிய பின்னர் குண்டு துளைக்காத கார்களை வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version