முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாடகை வீட்டிற்கு குடிபெயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான முக்கிய தகவலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று வெளியிட்டிருந்தார்.
இந்த செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர்களது நண்பர்களிடமிருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாடகை வீடு
இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரச்சினை தொடர்ந்து வருவதால், மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இங்கிருந்து வெளியேறுவது குறித்து திட்டமிட்டுள்ளார்.
அதற்கமைய, அங்கிருந்து வாடகை வீட்டிற்கு செல்வது பொருத்தமானது என நேற்று நாமல் தனது தந்தையிடம் பரிந்துரைத்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.