Home இலங்கை அரசியல் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி: நாமல் வெளிப்படை

மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி: நாமல் வெளிப்படை

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கலைக்கப்படும் நாடாளுமன்றம்

அதேநேரம் தாம் வெற்றி பெற்றால் எதிர்வரும் 22ஆம் திகதியே நாடாளுமன்றம் கலைக்கப்படும்.

தமது தரப்பினரின் ஒத்துழைப்புடன் இடைக்கால அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

Source: https://tamilwin.com/article/mahinda-rajapaksa-as-prime-minister-1726136431

NO COMMENTS

Exit mobile version