Home இலங்கை அரசியல் மகிந்தவுக்கு சொந்தமான வீடு : சபையில் வெளிப்படுத்திய அமைச்சர்!

மகிந்தவுக்கு சொந்தமான வீடு : சபையில் வெளிப்படுத்திய அமைச்சர்!

0

நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் ஆரம்பிக்கப்பட்ட வியத்புர வீட்டுத் தொகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான ஒரு வீடு காணப்பட்டதாக வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று (15.11.2025) வரவு செலவு திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான விவதாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த வீட்டில் பொரலஸ்கமுவ பிரதேசத்தின் முன்னாள் மேயர் அருண பிரியசாந்த வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியத்புர வீட்டுத் தொகுதி

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நியமிக்கப்பட்ட வீட்டுவசதி அறங்காவலரின் அறிக்கைகளின்படி, பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் வேறு சில வெளியாட்கள் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு வியத்புர வீட்டுத் தொகுதியில் வீடுகளை கொண்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளிப்படுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 39 வீடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version