Home இலங்கை அரசியல் சீன வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த முன்னாள் அதிபர் மகிந்த

சீன வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த முன்னாள் அதிபர் மகிந்த

0

சீனாவின் (China) வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டோங் (Sun Weidong) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) சந்தித்து கலந்துரையாடினார்.

பீஜிங்கில் (Beijing) இன்று (28) இடம்பெற்ற சந்திப்பின் போது மகிந்த ராஜபக்சவை ‘சீனாவின் பழைய நண்பர்’ என பிரதி அமைச்சர் அழைத்திருந்தார்.

அத்துடன் 2014 ஆம் ஆண்டு அதிபர் ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) இலங்கை விஜயத்தையும் நினைவு கூர்ந்தார்.

இலங்கைக்கு ஆதரவு வழங்கும் சீனா

இலங்கையும் சீனாவும் பெல்ட் அன்ட் ரோடு முன்முயற்சியில் (PRI) மிகச் சிறந்த பங்காளிகளாக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் சீனாவின் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு சீனா தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் வெய்டோங் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தியில் சீனாவின் உறுதியான ஆதரவை மகிந்த ராஜபக்ச பாராட்டியதுடன் எதிர்காலத்தில் தொடர்ந்தும் ஒத்துழைக்குமாறு கோரினார்.

இதேவேளை “அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில்“ பங்கேற்பதற்காக மகிந்த ராஜபக்ச சீனாவின் பீஜிங்கிற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version