ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த
ராஜபக்ச ஓர் அறிவுரை வழங்கியுள்ளார்.
பேருவளை, மொரகொல்ல ஸ்ரீ புத்தசிரி மஹா விஹாரையில் புதிதாக கட்டப்பட்ட மண்டப
திறப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் கலந்து கொண்ட
போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுடன் நட்புடன் உரையாடியுள்ளார்.
“எப்படி இருக்கிறீர்கள் ஐயா, சுகமாக இருக்கிறீர்களா?” என்று ஜகத் விதான
உரையாடலைத் தொடங்க, அதற்கு மகிந்த ராஜபக்ச “நன்றாக இருக்கிறேன்” என்று
பதிலளித்துள்ளார்.
பெறுமதியான ஆவணங்கள்
“உங்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்ன?” என்று மகிந்த ராஜபக்ச வினவிய
போது, “இன்று முதல் எனக்கு பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள்
வழங்கப்பட்டுள்ளனர்” என்று ஜகத் விதான பதிலளித்துள்ளார்.
இதற்கு மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி, ஜகத் விதானவுக்கு ஒரு குறிப்பிட்ட
அறிவுரையை வழங்கியுள்ளார்.
“நீங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருங்கள். உங்களால் முடிந்தவரை
பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும், உங்களுக்கு ஏற்பட்ட அநீதியையும்
நாடாளுமன்றத்தில் கூறுங்கள். அந்தத் தகவல்கள், ஆவணங்கள் அனைத்தையும்
ஹன்சார்டில் பதிவு செய்யுங்கள். அவைதான் மிகவும் பெறுமதியான ஆவணங்களாக மாறும்” என அவர் கூறியுள்ளார்.
“ஐயாவின் அறிவுரைக்கு மிக்க நன்றி. நான் ஏற்கனவே அனைத்தையும் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பித்துவிட்டேன்” என்று ஜகத் விதான, முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.
