Home இலங்கை அரசியல் மகிந்தவுக்கு பாதிப்பென்றால் நாட்டில் கலவரம் வெடிக்கும்! அரசை எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

மகிந்தவுக்கு பாதிப்பென்றால் நாட்டில் கலவரம் வெடிக்கும்! அரசை எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

0

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் கலவரம் வெடிக்கும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும், செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.

பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானங்கள் சிறந்தது என்பதால் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். எமது இடைக்கால அரசாங்கத்தின் தீர்மானங்கள் சரி என்று ஏற்றுக் கொள்ளும் நிலையில் மக்கள் இன்று உள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக நாங்கள் செயற்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான கௌரவம் இன்றும் அவ்வாறே உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நாட்டுக்கு முக்கியமானது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாட்டில் மீண்டும் கலவரம் தோற்றம் பெறும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version