Home இலங்கை அரசியல் நாளுக்கு நாள் குறைக்கப்படும் மகிந்தவின் பாதுகாப்பு! கிடைத்துள்ள கடிதம்

நாளுக்கு நாள் குறைக்கப்படும் மகிந்தவின் பாதுகாப்பு! கிடைத்துள்ள கடிதம்

0

தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான  மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். 

மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

கேள்விக்குள்ளாகும் பாதுகாப்பு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் பாதுகாப்பு பிரச்சினை ஒன்று உள்ளது.  குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகின்றது.   மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை மேலும் குறைப்பதாகத் தெரிவித்து தற்போதும் எமக்கு ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.  

இதேபோன்று நாட்டு மக்களின் பாதுகாப்பையும் நாளாந்தம் குறைத்து வருகின்றனர். மகிந்த ராஜபக்ச யுத்தத்தை நிறைவு செய்தார். சீரமைத்தார்.  ஜனாதிபதியாகவும் செயற்பட்டார். அவருடைய பாதுகாப்பை குறைக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் மக்களினுடைய பாதுகாப்பினையும் குறைக்கின்றனர்.

ஒவ்வொரு இடங்களிலும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்படுகின்றது.  நீதிமன்றத்திற்குச் சென்ற நீதிபதி முன்னாலேயே துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். காணாமல் போன சந்தேகநபர் செவ்வந்தியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அடுத்து பெற்ற பிள்ளைகளின் முன்னாலேயே தந்தையை சுட்டுக் கொலை செய்து விட்டு செல்கின்றனர். 

இதுபோன்ற விடயங்களுக்கு இடமளிக்க முடியாது.  இவற்றைக் கட்டுப்படுத்தத்தான் நாட்டில் சட்டம் என்ற ஒன்று உண்டு என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version