முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை திரும்பப் பெற்ற தற்போதைய அரசாங்கம், மீண்டும் தனக்கு பாதுகாப்பை வழங்க முடிவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து திரும்பப் பெறப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க அரசாங்கம் விரும்பினால், அதை மறுக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோக்கம் என்ன..
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை என்று எந்தவொரு குழந்தையும் கூட உணரும் என்றும், அந்தப் பாதுகாப்பை திரும்பப் பெற்று மீண்டும் வழங்குவதற்கான நோக்கம் கேள்வி எழுப்புவதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், “மீண்டும் பாதுகாப்பை வழங்க விரும்பினால், எங்கள் பாதுகாப்பை ஏன் நீக்கினீர்கள்? மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டால், நாங்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம்.
இப்போது அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை என்று கூறுகிறார்கள். ஒரு குழந்தைக்கு கூட இதனை புரிந்துகொள்ள முடியும்” என கூறியுள்ளார்.
