Home இலங்கை அரசியல் தங்காலை கால்டன் இல்லத்தில் மகிந்தவுக்கு பெரும் ஆபத்து

தங்காலை கால்டன் இல்லத்தில் மகிந்தவுக்கு பெரும் ஆபத்து

0

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு சென்று தங்காலை கால்டன் இல்லத்தில் வசிப்பது அவரின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கூறியுள்ளார்.

வீட்டுக்கு செல்லும் சந்தர்ப்பத்தில், விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிக்கு அருகில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவின் பாதுகாப்பை குறைத்து

தொடர்ந்து பேசிய அவர்,
பாதுகாப்புக்கான அனைத்து பொறுப்புக்களையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்.

விஜேராம இல்லத்தை தேர்ந்தெடுத்தது இடவசதிக்காகவல்ல.குறித்த இடத்தில் பொலிஸ்மா அதிபரின் இல்லம் மற்றும் தூதுவராலயங்கள் அமைந்துள்ளதால் அதி பாதுகாப்பு வலயம் ஆகையால் இதை தேர்தெடுத்தோம்.

தங்காலைக்கு செல்வதால் அவரின் பாதுகாப்புக்கு தெளிவான அச்சுறுத்தல் இருக்கிறது.

மகிந்தவின் பாதுகாப்பை குறைத்து வீட்டை விட்டு அனுப்புமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்திருக்க கூடும்.

ஏனென்றால் புலம்பெயர் தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஏதும் நிறைவேற இருக்கலாம் எனத் தோன்றுகிறது.   

NO COMMENTS

Exit mobile version