Home இலங்கை சமூகம் பாலித தெவரப்பெருமவிற்கு அஞ்சலி செலுத்திய அதிபர் ரணில்

பாலித தெவரப்பெருமவிற்கு அஞ்சலி செலுத்திய அதிபர் ரணில்

0

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு (Palitha Thewarapperuma) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இன்று(19) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு விஜயம் செய்து அவர் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் நேற்றைய தினம்(18) முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

ஆதரவு வழங்கினால் பதவி வழங்கப்படும்.. ரணிலுக்கு கடிவாளமிடும் சஜித்!

இறுதி அஞ்சலி

இதேவேளை அங்கு கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச பாலித தெவரப்பெரும தேசத்தின் குடிமக்களுக்காக நின்று உழைத்த ஒரு அரசியல்வாதியென தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) இறுதிக் கிரியைகள் (Funeral) இன்று(19) பிற்பகல் இரண்டு மணி அளவில் இடம்பெறவுள்ளன.

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் : உறங்கும் நேரத்திலும் மாற்றம்

பூதவுடல் அடக்கம்

பாலித தெவரப்பெரும (Palitha Thewarapperuma) தனது 64 ஆவது வயதில் கடந்த 16 ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மேலும் தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது அவரே தயார் செய்த மயானத்தில் அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version