Home இலங்கை பொருளாதாரம் உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

0

உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது.

அமெரிக்காவின் (America) ஊடகமொன்றுடனான விசேட நேர்காணலில் கலந்து கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விசா! நிராகரிக்கப்படும் போலி செய்திகள்

மிகக் குறைந்த வரி

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கொள்கை ரீதியான உடன்படிக்கையை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புகின்றது.

உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக நாம் பெயரிடப்பட்டுள்ளோம். ஆனால் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாங்கள் படிப்படியாக வரி வருவாயை அதிகரித்துள்ளோம்.

நாம் இப்போது வரி செலுத்துவதில் இருந்து விலக்கை நீக்கியுள்ளோம். வரி இணக்கத்தை வலுப்படுத்தியுள்ளோம்.

மின் கட்டணத்தை குறைப்பதே நோக்கம்: கஞ்சன விஜேசேகர அறிவிப்பு

 அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து அரசாங்கத்தின் வருமானம் 11 வீதமாக அதிகரித்துள்ளது, இது அரசாங்கத்தின் வருமானத்தில் 8.1 வீதமாகும். 2024 ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 12 வீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் அந்த இலக்கை எங்களால் அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது, ​​வரி இணக்கம் 130 வீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

வரி தொடர்பான பதிவு செய்தலும் அதிகரித்துள்ளது. நல்ல எண்ணிக்கையாக இருந்தாலும் திருப்தி அடைய முடியாது. வரி செலுத்த வேண்டியவர்கள் அனைவரையும் வரி செலுத்த வைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நாளை முதல் எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version