Home இலங்கை அரசியல் அனுதாபம் தேட முயற்சிக்கும் மகிந்த

அனுதாபம் தேட முயற்சிக்கும் மகிந்த

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பொதுமக்களின் அனுதாபத்தைப்
பெறுவதற்கான நாடகங்கள் தற்போது நடத்தப்படுகின்றன என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனுதாபம் தேட முயற்சி

பொதுஜன பெரமுன மற்றும்  மற்றும் ராஜபக்சர்கள் தற்போது இக்கட்டான நிலையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.  உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு  வெளியேற வேண்டிய நிலையில், அவர்கள் எங்கும் செல்ல முடியாது என்று தெரிவித்து பொதுமக்களிடத்தில் அனுதாபத்தை தேட முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை இரத்துச் செய்யும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, நாடு சரியான பாதையில் கொண்டு செல்லப்படுகின்றது.  

இந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதன் மூலம் அரசாங்கம், அதன் வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளது என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி  குறிப்பிட்டுள்ளார். 

 

NO COMMENTS

Exit mobile version