Home இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மகிந்த ராஜபக்ச காலத்தில் நடந்த விடயம்..

வரலாற்றில் முதன்முறையாக மகிந்த ராஜபக்ச காலத்தில் நடந்த விடயம்..

0

உலக வரலாற்றிலே தொடர்ச்சியாக 3 தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வரலாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தான் இடம்பெற்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“மாமனிதர் ஜோசப் பராரஜசிங்கம், மாமனிதர் ரவிராஜ், மாமனிதர் சிவராஜ் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, மகேஸ்வரன் என பலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு 2004ஆம் ஆண்டளவில் 37 பேர் ஆதரவாக இருந்தார்கள்.

அவர்கள் மக்கள் விடுதலை முன்ணி அமைப்பினை சார்ந்தவர்கள்.

தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அநுரகுமார திசாநாயக்கவும், அவரது ஆட்சிகாலத்தில் விவசாய காணி அமைச்சராக அவரது காலத்தில் இருந்தார்” என குறிப்பிட்டார். 

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version