கடந்த அரசாங்கங்களின் போது அரசியல்வாதிகள் குற்றம் செய்திருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு அவர்களை குற்றவாளி என்று முத்திரை குத்துவது நியாயமில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட மகிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அரசியல் ரீதியாக பழிவாங்குவது நியாயமில்லை என மகிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
மன வேதனையில் மகிந்த
தனது உடல்நலக் குறைபாடுகளை பயன்படுத்தி சிலர் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற தவறான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படுவது வருத்தமளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
