முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகை குறைப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசியல் பழிவாங்கலுக்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையை விட மெதமுலன மாளிகை மிகவும் சிறந்தது என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அங்கீகாரம்
மேலும் கருத்து வெளியிட்ட அவர், அது ஒரு பிரச்சினை அல்ல என்றும், தான் பெற்ற சலுகைகள் பொதுமக்களிடமிருந்து பெற்றவை என்றும், அதற்கு மேல் எதுவும் முக்கியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, மக்களிடமிருந்து பெற்ற அங்கீகாரம் இருக்கும் வரை, அவர்கள் தங்களிடமிருந்து எந்த சலுகைகளை நீக்கினாலும் பிரச்சினை இல்லை எனவும் அவர் கூறினார்.
