எங்களை போக சொன்னார்கள், எனவே நாம் போகிறோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது விஜேராம இல்லத்தில் இருந்து இன்று(11.09.2025) வெளியேறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஊடகங்களுக்கு கூறுவதற்கு ஏதேனும் கருத்து உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
எதிர்கால அரசியல்
அப்போது, அதற்கு பதிலளித்த மகிந்த, சொல்வதற்கு என்ன உள்ளது, எங்களை போக சொன்னார்கள், நாம் செல்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்கால அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அரசியலை ஒருபோதும் கைவிட மாட்டேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
