Home இலங்கை அரசியல் மகிந்தவின் உடல்நிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகிந்தவின் உடல்நிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

உடல் நிலை

முன்னாள் ஜனாதிபதி உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த நாமல் , “சமூக ஊடகங்களில் என்ன பேசப்பட்டாலும், நான் வீட்டிற்குச் சென்றபோது தந்தை நலமுடன் இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாமல் ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

NO COMMENTS

Exit mobile version