Home இலங்கை அரசியல் மகிந்த வெளியேறும் போது இறுதி நிமிடத்தில் கதறி அழுத பெண்

மகிந்த வெளியேறும் போது இறுதி நிமிடத்தில் கதறி அழுத பெண்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருடைய உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் போது எங்களுடைய ராஜாவை படம் பிடிக்க வேண்டாம், அவரை நிம்மதியாக போக விடுங்கள் என்று ஒரு பெண் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டதாக லங்காசிறியின் பிராந்திய செய்தியாளர் வி.டில்சான் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை வரலாற்றில் யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருடைய உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு நேற்றையதினம்(11) வெளியேறியுள்ளார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.

அங்கு வருகை தந்த மகிந்த ஆதரவாளர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கடுங்கோபத்தில் இருப்பதை அவர்களின் கருத்துக்களின் ஊடாகவும்,கோசங்களின் ஊடாகவும் தெரிந்துக்கொள்ள கூடியதாயிருந்தது என குறிப்பிட்டார்

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version