Home இலங்கை அரசியல் மகிந்த முன்பே வகுத்திருந்த திட்டம்: தாமதமாக நிறைவேற்றிய அநுர

மகிந்த முன்பே வகுத்திருந்த திட்டம்: தாமதமாக நிறைவேற்றிய அநுர

0

தற்போது சீனாவிடமிருந்து பெறப்பட்டுள்ள 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் போதே கொண்டுவருவதற்கு நடவடிக்கைகைகள் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கு மக்கள் விடுதலை முன்னணி ( ஜே.வி.பி) கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இதே முதலீட்டைச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஜே.வி.பி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை எதிர்த்ததாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய அரசின் முயற்சி 

எவ்வாறாயினும், தாமதமானாலும், முதலீட்டுத் திட்டத்தை நாட்டிற்குக் கொண்டு வந்தமை தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது,  “2015 க்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் போது நடந்த கலந்துரையாடல்களின் போது அதே முதலீடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் இந்த திட்டத்தை மீண்டும் செய்ய முயற்சித்தபோது, ​​அவர்கள் இதை ஒரு சீன குடியிருப்பாக மாற்றப் போவதாகக் கூறினர்.

மிகப்பெரிய முதலீடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில், அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார்.

அன்று சீன முன்மொழிவுகளை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

தாமதமாக இருந்தாலும், இலங்கையில் மிகப்பெரிய முதலீட்டைக் கொண்டுவருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.  

NO COMMENTS

Exit mobile version