Home முக்கியச் செய்திகள் மஹிந்தானந்த சிறையில் இருந்து விடுத்துள்ள கோரிக்கை

மஹிந்தானந்த சிறையில் இருந்து விடுத்துள்ள கோரிக்கை

0

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவு மற்றும் பானங்களைப் பெற அனுமதிக்குமாறு சிறைச்சாலைக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தற்போது வெலிகட சிறைச்சாலையின் “M2” பிரிவில் கிட்டத்தட்ட 10 கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட பிறகு, அவருக்கும் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளக்கமறியல் உத்தரவு 

முந்தைய அரசாங்கத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்த வழக்கில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் அதே பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version