முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு புதிய திரைப்படம் ஒன்று தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவ்தீசா பிக்சர்ஸ் சார்பில் மோகன் பெரேரா தயாரிக்கும் இந்தப் படத்தின் பணிகளுக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவுடன் ஏற்கனவே கலந்துரையாடல் தொடங்கியுள்ளது.
மகிந்தவிடம் வழங்கப்பட்ட திரைக்கதை
மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கை மற்றும் போர்க்காலத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் அசல் திரைக்கதை அவருக்கு வழங்கப்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
