Home இலங்கை கல்வி கொழும்பு பிரபல பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

கொழும்பு பிரபல பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0

கொழும்பில் (colombo)பிரபல பாடசாலையான ரோயல் கல்லூரி (royal college)உட்பட ஏழு பாடசாலைகள் தற்போது அதிபர்கள் இன்றி இயங்குவதாக கல்வி அமைச்சு நேற்று (22) தெரிவித்துள்ளது.

இதன்படி தேவி பாலிகா, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை, செயின்ட் போல்ஸ், இந்துக் கல்லூரி, இசிபதன கல்லூரி, லும்பினி மற்றும் பிலியந்தலை எம்.எம்.வி ஆகியவை கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பாடசாலைகளிலும் அதிபர்கள் இன்றி உள்ளன.

அதிபர்கள் இன்றி இயங்கும் பிரபல பாடசாலைகள்

மொத்தம் 46 பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. பண்டாரநாயக்க MW கம்பகா, சங்கமித்தா கல்லூரி, தர்மசோகா, தேவானந்தா வித்தியாலயம், புனித தோமஸ் சிலாபம், ஜோசப் வாஸ் கல்லூரி, ராஜபக்ச விதாயாலயம் வீரகெட்டிய, அநுராதபுரம் MMV மற்றும் இன்னும் சில பாடசாலைகள் அதிபர்கள் இன்றி இயங்குகின்றன.

எனவ அதிபர்கள் இன்றி இயங்கும் பாடசாலைகளின் வெற்றிடங்களை நிரப்ப 2024 டிசம்பர் 31க்கு முன் சம்பந்தப்பட்ட தகுதி வாய்ந்த அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version