Home இலங்கை அரசியல் அமைச்சர்கள், சொத்துக்களை கொள்ளையடிக்கும் விதத்தை வெளிப்படுத்திய மைத்திரி

அமைச்சர்கள், சொத்துக்களை கொள்ளையடிக்கும் விதத்தை வெளிப்படுத்திய மைத்திரி

0

Courtesy: Sivaa Mayuri

அமைச்சர்கள் எவ்வாறு அரசாங்க சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

செயலாளர்கள் மற்றும் பிரதம கணக்காளர்களுக்கு தெரியாமல் அமைச்சர்களால் திருட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் 45ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கணக்காளர்கள் அமைச்சரின் முன்மாதிரியைப் பின்பற்றத் தொடங்குவதாகவும், இந்த நடைமுறை பின்னர் கீழ்மட்டத்துக்கு செல்வதாகவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

நம்பகமான அதிகாரிகள்

இதேவேளை, கோரப்படாத கொள்வனவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கொள்வனவு நடவடிக்கைகளும் அமைச்சின் செயலாளர்கள் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தனது அரசாங்கத்தின் போது, அனைத்து கொள்வனவுகளையும் மேற்பார்வையிடுவதற்காக தேசிய கொள்வனவு முகவர் நிலையம் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலேயே மிகவும் நம்பகமான அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் ஊழல் செய்யவில்லை, ஆனால் துரதிஸ்டவசமாக, புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் அவர்கள் நீக்கப்பட்டனர் என்று சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version