Home இலங்கை அரசியல் இலஞ்ச ஊழல் எதிர் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்ரி

இலஞ்ச ஊழல் எதிர் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்ரி

0

Courtesy: Sivaa Mayuri

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று (26.11.2024) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இதன்படி, மைத்ரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் தாம் வழங்கிய ஜனாதிபதியின் மன்னிப்புக்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணை

இது தொடர்பான விசாரணைக்காகவே மைத்ரி இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version