புதிய இணைப்பு
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இன்றையதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
