மட்டக்களப்பு (Batticaloa) கல்முனை (Kalmunai) பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது, (01.09.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் தெரியவருகையில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி
ஒன்றும் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
பாரிய விபத்து
சம்பவம் அறிந்த களுவாஞ்சிகுடி (Kaluwanchikudy) போக்குவரத்து காவல்துறையினர் ஸ்தலத்திற்கு
விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இவ்விபத்தில் முச்சக்கர
வண்டியில் பயணித்த ஒருவர் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில்
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக
சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சுக்குநூறாக
நொருங்கியுள்ளதுடன், பேருந்தின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இது
தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
[IFOSMI9]